அல்வா பூரி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 1/2 கிலோ

எண்ணெய் - பொரிப்பதற்க்கு தேவையான அளவு

உப்பு - அரை ஸ்பூன்

அல்வா செய்வதற்க்கு:

----------------------------------

உருளை கிழங்கு - 1/4 கிலோ

முந்திரி பருப்பு - 100 கிராம்

சீனி - 1/4 கிலோ

நெய் - 200 கிராம்

ஏலக்காய் - 5

கேசரி கலர் - 1/4 தேக்கரண்டி

செய்முறை:

மைதாவில் உப்பு சேர்த்து, 2 ஸ்பூன் நெய்யை சூடாக்கி ஊற்றி ஒரு கரண்டியால் கலந்து கொள்ளவும்.

மாவில் தண்ணீர் தெளித்து பூரி மாவு பதத்திற்கு பிசைந்து ஒரு ஈர துண்டால் மூடி வைக்கவும்.

உருளை கிழங்கை குக்கரில் வைத்து நன்றாக வேகவைத்து ,லேசாக ஆறியவுடன் தோலை உறித்து துண்டுகளாக கட் செய்து கொள்ளவும்.

முந்திரியை வெந்நீரில் பதினைந்து நிமிடம் ஊற வைக்கவும்

மிக்ஸியில் உருளை கிழங்கு துண்டுகள், முந்திரி , ஏலக்காய் போட்டு அரை கப் தண்ணீர் விட்டு நைசாக அரைத்து எடுத்து கொள்ளவும்.

ஒரு கனமான பாத்திரம் அல்லது ப்ரெஷர் பேனை அடுப்பில் வைத்து சீனியை போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றவும்

சீனி கரைந்ததும் அரைத்த முந்திரி, உருளை விழுதை சேர்த்து கை விடாமல் கிண்டவும் இல்லாவிட்டால் அடிபிடித்துவிடும்

கலவை இறுகி வரும் போது நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றவும். பாத்திரத்தின் ஓரஙளில் ஒட்டாமல் வரும் போது கலர் கலந்து இறக்கி ஆற விடவும்.

பிசைந்து வைத்திருக்கும் மாவை எலுமிச்சை உருண்டைகளாக்கி கொள்ளவும்.

ஒரு உருண்டையை பூரி அளவுக்கு வட்டமாக பரத்தி நடுவில் ஒரு கரண்டி அல்வாவை வைத்து பாதியாக மூடி (சோமாஸ் போல) ஓரங்களை தண்ணீர் தொட்டு அழுத்தி ஒட்டி விடவும்.

வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பூரிகளை பொரித்து எடுக்கவும்.

குறிப்புகள்:

அல்வா பூரியுடன் அரிசி பிரினி அல்லது ரவை பிர்னி வைத்து தொட்டு கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும்.