அரிசி பால் கஞ்சி
1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 டம்ளர்
வெந்தயம் - 1 மேசைக்கரண்டி
பூண்டு - 4 பற்கள்
தேங்காய் பால் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசியை கழுவி 1 டம்ளருக்கு 3 டம்ளர் வீதம் தண்ணீர் ஊற்றி ப்ரஷர் குக்கரில் வைக்கவும்.
அதில் வெந்தயம்,பூண்டு மற்றும் உப்பு சேர்த்து நன்கு வேகவிடவும்.
வெந்த பின் குக்கரை திறந்து அதனுடன் 1 கப் தேங்காய் பால் சேர்க்கவும்.
சுவையும் சத்தான அரிசி பால் கஞ்சி ரெடி.