அயிரை மீன் குழம்பு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அயிரை மீன் - 1/4 கிலோ

வெங்காயம் - 1/4 கிலோ (நீளமாக நறுக்கவும்)

தக்காளி - 2 ( நறுக்கவும்)

பூண்டு- 4 பல் ( பொடியாக நறுக்கவும்)

மிளகாய் - 2

கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - கொஞ்சம்

எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

கடுகு, உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி

வெந்தயம் - கால் தேக்கரண்டி

மிளகாய்தூள்- 1 தேக்கரண்டி.

சீரகதூள் - 1/2 தேக்கரண்டி

மல்லித்தூள் - 1 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி.

புளி - சிறிய எலுமிச்சை அளவு. (கரைத்துக்கொள்ளவும்)

தேங்காய் - 3 மேசைக்கரண்டி (அரைத்துக்கொள்ளவும்)

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

முதலில் பாத்திரத்தில் அயிரை மீனை கல் உப்பு போட்டு மூடி போட்டு மூடி விடவும். அது துடிப்பு அடங்கியதும் நன்றாக உரசி உரசி மூன்று நான்கு தண்ணீர் விட்டுகழுவ வேண்டும். வடிகட்டி வைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விடவும். கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, பூண்டு, வெங்காயம் தாளித்து வதங்கியவுடன், தக்காளி. உப்பு சேர்க்கவும். தக்காளி மசிந்தவுடன், மிளகாய்த்தூள், மஞ்சள், சீரகம், மல்லித்தூள்களை சேர்க்கவும். புளித்தண்ணீர் விடவும்.

நன்றாக கொதித்து மசாலா வாடை அடங்கியதும் மீனை போடவும், 5 நிமிடம் கழித்து தேங்காய் விடவும்.

குழம்பில் அகப்பை போடக்கூடாது. மீன் உடைந்துவிடும். இந்த மீன் சீக்கிரம் வெந்து விடும். மல்லித்தழை தூவி இறக்கவும். மனதை அள்ளும் அயிரை மீன் குழம்பு ரெடி.

குறிப்புகள்: