அம்பறெல்லா தோஸி

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

அம்பறெல்லா காய் - 10

சீனி (சர்க்கரை) - 2 கப்

ஏலக்காய்த் தூள் - 3 அல்லது 5

தண்ணீர் - 1 அல்லது 2 கப் (சீனிப்பாகு காய்ச்சக் கூடியளவு)

செய்முறை:

அம்பறெல்லா காயின் தோலை அகற்றவும். அம்பறெல்லாகாயை சுத்தியால் அல்லது உரலில் போட்டு அடித்து சப்பையாக்கவும் (தட்டையாக்கவும்).

ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் சீனியை கரைக்கவும். அதனுடன் ஏலக்காய்த்தூள் சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக பாகு காய்ச்சவும் .

பாகில் தட்டையான (சப்பையான) அம்பறெல்லா காயை போட்டு நன்றாக பிரட்டவும் (அம்பறேல்லாகாயில் சீனிப்பாகு ஒட்டக்கூடியதாக சேர்த்து பிரட்டவும் (கலக்கவும்)).

அம்பறெல்லா காயை நன்றாக காயவிடவும் (ஒரளவு காய்ந்ததும் திருப்பி மறு பக்கம் போட்டு காய விடவும் (குலுக்கி குலுக்கி) இது நன்றாக காய்ந்ததும் எடுத்து சாப்பிடவும்..

குறிப்புகள்: