அச்சு பணியாரம்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - ஒரு படி
முட்டை - 10
சீனி - முக்கால் படி
டால்டா - 100 கிராம்
நெய் - 100 கிராம்
பேக்கிங் பவுடர் - 1/4 தேக்கரண்டி
உப்பு - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
பச்சரிசியை நன்கு கழுவி காய வைத்து எடுத்து மாவாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றிக் கொள்ளவும்.
அதனுடன் சீனி, நெய், பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்த்து சீனி கரையும் வரை ஒரு மத்தால் நன்கு கடையவும்.
சீனி நன்றாக கரைந்ததும் அரிசி மாவைப் போட்டு நன்றாக கடையவும். எவ்வளவு கடைகின்றோமோ அவ்வளவு மென்மையாக இருக்கும்.
பிறகு அச்சு சட்டியின் டிசைனில் டால்டாவை சிறிது சிறிதாக விட்டு ஒட்டாதபடி மாவை ஊற்றி, அச்சு சட்டியின் மூடியின் மீது நெருப்பினை வைக்கவும்.
சுமார் 20 நிமிடங்கள் சென்றபின் திறந்து பார்க்கவும். மாவு வெந்து கேக் போல மேலெழும்பி உப்பலாக வந்திருப்பின் எடுத்து ஒரு தட்டில் கவிழ்த்துக் கொள்ளவும்.