அகர் அகர்
0
தேவையான பொருட்கள்:
கடல் பாசி (சைனா கிராஸ்) - 100 கிராம்
பால் - 1/2 லிட்டர்
சர்க்கரை - 3/4 கப்
ஏலக்காய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
டூட்டி ப்ரூட்டி - சிறிது
செய்முறை:
அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி பாதியளவு சுண்டும் வரை காய்ச்சவும்.
வேறு ஒரு பாத்திரத்தில் கடல் பாசியைப்போட்டு, தண்ணீர் சேர்த்துக் கிளறவும்.
கடல் பாசி கரைந்து வரும் போது, சர்க்கரை, ஏலக்காய்த் தூள் சேர்த்து, நன்கு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
மிதமான சூட்டுக்கு வந்ததும் சுண்டக்காய்ச்சிய பாலை ஊற்றிக் கலந்து ஒரு தட்டில் ஊற்றவும்.
டூட்டு ப்ருட்டி தூவி இறுகியதும் துண்டு போடவும்.