ஃப்ரெஞ்ச் உருளை வறுவல்
தேவையான பொருட்கள்:
சின்ன உருளைக்கிழங்கு - 1 கிலோ
ஆலிவ் ஆயில் - 2 கரண்டி
கடுகு - 2 கரண்டி
ஹெர்பல் இலைகள் - 1 கரண்டி
சிறிய பூண்டு - ஒன்று (நசுக்கவும்)
மிளகுத்தூள் - 1 மேசைக்கரண்டி
கல் உப்பு - 1 மேசைக்கரண்டி
தூள் உப்பு - 1 மேசைக்கரண்டி
செய்முறை:
உருளைக்கிழங்கை தோல் சீவி கட்டம்கட்டமாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு அது முழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி கல் உப்பை போட்டு ஐந்து நிமிடம் வேகவிடவும்.
வெந்ததும் தண்ணீரை வடித்துவிட்டு ஒரு வாயகன்ற கோப்பையில் போட்டு அதில் ஆயில், பூண்டு, கடுகு, ஹெர்பல் இலை போட்டு கிளறி பத்து நிமிடம் வைக்கவும்.
பின் அவனில் வைக்கும் தட்டில் அலுமினிய பேப்பர் போட்டு அதில் பரப்பி வைத்து அவனில் வைத்து இருபது நிமிடம் வேகவிடவும் இடையிடையில் திருப்பிவிடவும்.
வெந்ததும் (சிவந்ததும்) எடுத்து ஒரு கோப்பையில் போட்டு மிளகுத்தூள் தூள் உப்பை போட்டு கிளறி விருப்பமான சாலட்டுடன் பரிமாறவும்.