ஃப்ரூட் சாலட்
0
தேவையான பொருட்கள்:
ஆப்பிள் - 1
கமலா ஆரஞ்சு - 1
விதை இல்லாத திராட்சை - 100 கிராம்
பேரீக்காய் - 1
வாழைப்பழம் - 1
(நார் இல்லாத) மாம்பழம் - 1
கொய்யாப்பழம் - 1
(பதப்படுத்திய) செர்ரி பழம் - 50 கிராம்
முந்திரிப்பருப்பு - 10
டின் பால் - ஒரு டின்
செய்முறை:
திராட்சை தவிர மற்ற பழங்களை கழுவி தோல் நீக்கிக் கொள்ள வேண்டும்.
முந்திரிப்பருப்புகளை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
மற்ற எல்லா பழங்களையும் சிறிய துண்டுகளாக்கி, ஒன்றாக கலந்து ஃப்ரிட்ஜில் 2 மணிநேரம் வைக்க வேண்டும்.
பிறகு நன்றாக குளிர்ந்தவுடன் எடுத்து அத்துடன் நறுக்கி வைத்துள்ள முந்திரிப் பருப்புகளை போட்டு, எல்லாப் பழங்களிலும் ஒட்டும் அளவு டின் பாலை ஊற்றி நன்கு பிரட்டி உடனே பரிமாறலாம்.
இது ஒரு சத்தான, சுவையான டெஸ்ர்ட்.