ஃபிஷ் பிக்கிள்
தேவையான பொருட்கள்:
சீலா மீன் அல்லது டூனா (சூரை) - 1/2 கிலோ
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் -1 தேக்கரண்டி
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 10 பல்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
வினிகர் - 1 மேசைக்கரண்டி
நல்லெண்ணெய் - 100 மில்லி
உப்பு - தேவையான அளவு
வறுத்து பொடி பண்ண:
-----------------------------------
கடுகு - 1/2 தேக்கரண்டி
வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிய துண்டு
காய்ந்த மிளகாய் - 3
செய்முறை:
மீனைச்சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக்கி உப்புத்தூள், மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள், வினிகர் சேர்த்து பிசறி அரைமணி நேரம் வைத்து பின் நல்ல முறுகளாக பொரித்து எடுக்கவும்.
பின்பு கடாயில் பொரித்த எண்ணெய் விட்டு இஞ்சி,பூண்டு,கறிவேப்பிலை,பச்சை மிளகாய் இரண்டு போட்டு தாளித்து,பொரித்து வைத்துள்ள மீன் துண்டுகளை போட்டு கிளறி வறுத்து பொடித்த பொருட்களை போட்டு, சிம்மில் வைத்து பத்து நிமிடம் கழித்து இறக்கவும். மீன் ஊறுகாய் ரெடி. ஆற வைத்து பாட்டிலில் அடைத்து வைக்கவும்.