ஃபிரிட்ஜ் கேக்

on on on on off 1 - Great!
4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

Nice பிஸ்கெட் - 2 பாக்கெட்

லைட்டான காபி டிக்காஷன் - 1/2 கப்

உப்பு கலக்காத வெண்ணெய் - 200 கிராம்

ஐசிங் சுகர் - 250 கிராம்

கோக்கோ பௌடர் - 4 தேக்கரண்டி

செய்முறை:

வெண்ணெயை நன்கு அடித்துக் கொள்ளவும்

அதில் கோக்கோ பௌடர்,ஐசிங்சுகர் சேர்த்து க்ரீம் பதத்தில் அடித்துக் கொள்ளவும்

பிஸ்கெட்டுகளை இளம் சூடான டிக்காஷனில் முக்கி உடனே எடுத்து ஒரு சதுரமான ட்ரேயில் அடுக்கவும்

மூன்று,மூன்று பிஸ்கெட்டுகளாக மூன்று வரிசையாக ஒன்பது பிஸ்கெட்டுகளை செவ்வகமாக அடுக்கவும்

அதன் மேல் ஒரு லேயர் க்ரீமை தடவவும்

மீண்டும் பிஸ்கெட்டுகளை டிக்காஷ்னில் முக்கி அடுக்கவும்

மீண்டும் க்ரீமை தடவவும்

இதே போல் பிஸ்கெட்டுகளை ஐந்து அடுக்குகளாக அடுக்கவும்

மீதியுள்ள க்ரீமை பிஸ்கெட் அடுக்கை சுற்றியும், மேலேயும் பூசவும்

இதைஃபிரிட்ஜில் ஒரு மணி நேரம் வைக்கவும்

பின் எடுத்து கத்தியால் வெட்டி பறிமாறவும்

குறிப்புகள்: