5 கப் ஈசி ஸ்வீட்
0
தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 1 கப்
பால் - 1 கப்
தேங்காய் துருவல் - 1 கப்
சர்க்கரை - 2 கப்
ஏலக்காய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
ரீஃபைன்ட் ஆயில் - 1 கப்
செய்முறை:
ஒரு வாணலியில் (இப்போது அடுப்பில் வைக்கவேண்டாம்) சலித்த கடலைமாவு, பால், மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்த தேங்காய் துருவல், ரீஃபைன்ட் ஆயில், சர்க்கரை இவை ஐந்தையும் போட்டு நன்றாக கட்டியில்லாமல் கலக்கவும்.
இந்த கலவையை அடுப்பில் வைத்து கிளறவும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கிளறவும். ஏலக்காய்பொடி சேர்க்கவும்.
30 நிமிடம் கிளறியதும் நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டுகள் போடவும்.
விருப்பபட்டால் இதில் மஞ்சள் கலர் சேர்த்தும் செய்யலாம்.