ஸ்வீட் பங்களாபாத்





3 நட்சத்திரங்கள் - 5 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1/2 கப்
சீனி - 1/4 தேக்கரண்டி
தேங்காய்ப்பால் பொடி - 3 தேக்கரண்டி
ஏலக்காய் பொடி - 1/4 தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு - 4 தேக்கரண்டி
உலர்ந்த திராட்சை - 2 தேக்கரண்டி
நெய் - 3 தேக்கரண்டி
பால் - 2 கப்
மில்க் மெய்ட் - 1/4 கப்
உப்பு - சிட்டிகை (சுவைக்கு)
செய்முறை:
முந்திரிப்பருப்பு, உலர்ந்த திராட்சை சிறியதாக நறுக்கவும்
பச்சரிசியில் தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் ஊற விடவும்
ஊறவைத்த பச்சரிசியை பாலில் போட்டு முக்கால் பதம் வேகவிடவும்
அதில் சீனி போட்டு, மில்க் மெய்ட், உப்பு, தேங்காய்ப்பால் பொடி சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்
பாத்திரத்தில் நெய்போட்டு முந்திரிப்பருப்பு, உலர்ந்த திராட்சை பொரித்து போட்டு கப்பில் ஊற்றி பரிமாறவும்.