வேர்க்கடலை உருண்டை (1)

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

வேர்க்கடலை - 1/4 கிலோ

வெல்லம் - 100 கிராம்

வெள்ளை எள்ளு - 2 மேசைக்கரண்டி

செய்முறை:

வெல்லத்தை பொடி செய்து வைத்துக் கொள்ளவும். வேர்க்கடலையை தோல் நீக்கி விட்டு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். எள்ளையும் தூசி இல்லாமல் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து சுத்தம் செய்த எள்ளை போட்டு பொன்னிறமாகும் வரை வறுத்து, 2 நிமிடம் கழித்து எடுத்துக் கொள்ளவும்.

அதன் பிறகு மிக்ஸியில் தோல் நீக்கிய வேர்க்கடலையை போட்டு பொடி செய்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பின்னர் அதே மிக்ஸியில் வறுத்து வைத்திருக்கும் எள்ளை போட்டு பொடி செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும். எள்ளை பவுடர் போல் பொடி செய்யாமல் சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

இப்போது வெல்லத்தை மிக்ஸியில் போட்டு பொடி செய்து விட்டு அதில் பொடி செய்த எள்ளையும் போட்டு இரண்டையும் சேர்த்து ஒருமுறை அரைத்துக் கொள்ளவும்.

வேர்க்கடலை பொடியுடன் பொடி செய்த எள்ளு, வெல்லம் இரண்டையும் போட்டு கலந்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு சிறு சிறு எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். இதில் வெல்லம் சேர்ந்திருப்பதால் தண்ணீர் சேர்த்து உருண்டை பிடிக்க தேவையில்லை. வெல்லத்தில் உள்ள ஈரபசையே போதும்.

குறிப்புகள்: