வேர்க்கடலை உருண்டை
0
தேவையான பொருட்கள்:
வேர்க்கடலை - 1 கப்
உருட்டு வெல்லம் - 2 கப்
செய்முறை:
வேர்க்கடலையை தோல் நீக்கி இரண்டாக உடைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றி கரைத்துக் வடிகட்டிக் கொள்ளவும். வாணலியில் வடிக்கட்டிய 2 கப் வெல்லத் தண்ணீரை ஊற்றி கைவிடாமல் கம்பி பதம் வரும் வரை கிளறவும்.
கம்பி பதம் வந்ததும் அதில் உடைத்த வேர்க்கடலையை சேர்த்து நன்றாக கிளறி விட்டு உடனே இறக்கி விடவும்.
பிறகு ஒரு கட்டை அல்லது தட்டில் எண்ணெய் தடவி இந்த வேர்க்கடலை கலவையை கொட்டி உடனே தேவையான அளவு கையில் எடுத்து உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
குறிப்புகள்:
வேர்க்கடலையில் உள்ள வெல்லப்பாகு இறுகி விட்டால் உருண்டை பிடிக்க வராது.
வேர்க்கடலை உருண்டைகளை காற்றுப் புகாத டப்பாகளில் போட்டு வைத்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.