வெள்ளை பூசணி கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி - 200 கிராம்
சர்க்கரை - 100 கிராம்
வெள்ளை பூசணி - 1 துண்டு
நெய் - 1 மேசைக்கரண்டி
உப்பு - 1 சிட்டிகை
வாழை இலை - 1 என்னம்
செய்முறை:
புழுங்கல் அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து மைபோல கெட்டியாக அரைக்கவும்.
வெள்ளை பூசணியை துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
சர்க்கரையை இளம் பாகு செய்து பூசணி துண்டுகளை அதில் கலந்து கிளறவும்.
அல்வா பதம் வந்ததும் இறக்கி கொள்ளவும்.
அடி கனமான பாத்திரத்தில் நெய்யை விட்டு சூடாகியதும் அரைத்த புழுங்கலரிசி மாவை போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
சூடு ஆறினதும் மாவை பூரிக்கு உருட்டுவது போல சின்ன சின்ன வட்டங்களாக தட்டிக் கொள்ளவும்.
மாவின் நடுவில் கிளறிய வெள்ளை பூசணியை கொஞ்சம் வைத்து மூடவும்.
இந்த கொழுகட்டையை வாழை இலையை கொஞ்சமாக கட் செய்து அதில் வைத்து மடக்கி நூலில் கட்டி எண்ணைய் தடவிய இட்லி தட்டில் வைத்து வேகவைத்து எடுக்கவும்.