வெல்ல சீடை (1)
தேவையான பொருட்கள்:
முறுக்கு மாவு - 2 கப்
வெல்லம் - 3/4 கப்
ஏலக்காய் - 4
தேங்காய் பல் - 1/4 கப்
எள்ளு - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - 2 சிட்டிகை
செய்முறை:
முறுக்கு மாவு தயாரிக்க: ஒரு கிலோ பச்சரிசிக்கு கால் கிலோ வெள்ளை உளுத்தம்பருப்பு என்ற கணக்கில் எடுத்துக் கொள்ளவும். உளுத்தம் பருப்பை வாணலியில் பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பச்சரிசியை கழுவி காயவைத்துக் கொள்ளவும். பச்சரிசியுடன் உளுத்தம் பருப்பு சேர்த்து மிஷினில் கொடுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் வெல்லத்தை போட்டு, ஒரு கப் தண்ணீர் ஊற்றி, தண்ணீர் பாகாக கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். மாவுடன் ஏலக்காய் பொடி, உப்பு, எள்ளு, தேங்காய் பல் சேர்த்து ஒரு முறை கிளறிக் கொள்ளவும்.
அதில் வடிகட்டி வைத்து இருக்கும் வெல்லப் பாகை சிறிது சிறிதாக தெளித்து விட்டு மிருதுவாக பிசையவும். கெட்டியாக பிசைந்தால் சீடை உடைந்து விடும்.
பிசைந்த மாவை ஒரே அளவிலான உருண்டைகளாக உருட்டி 10 நிமிடம் காயவைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீடை எல்லாவற்றையும் போடவும். இடையில் சீடைகளை கிளறி விடவும்.
சீடையை சுமார் 8 நிமிடம் வேக வைத்து, எண்ணெய் அடங்கியதும் சிவக்க எடுக்கவும். எண்ணெய்யை வடியவிடவும்.
குறிப்புகள்:
இனிப்பு சீடை சற்று அதிகம் சிவந்து இருக்கும்.
காரச் சீடையைப் போல் மிகவும் மொறுமொறுப்பாக இருக்கக்கூடாது.