வெல்ல சீடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஈர அரிசி மாவு - 1 டம்ளர்

வெல்லம் - 1 டம்ளர்

உளுத்தம் மாவு - 1 மேசைக்கரண்டி

வெள்ளை எள் - 1 தேக்கரண்டி

ஏலக்காய் - 3

நெய் - 1 தேக்கரண்டி

சமையல் எண்ணெய் - 200 கிராம்

செய்முறை:

ஈர அரிசி மாவு தயாரிக்கும் முறை:

முதலில் தேவையான அளவு பச்சரிசையை தண்ணீரில் சுமார் அரை மணி நேரம் ஊறவைத்து,வடிய விடவேண்டும்.

பிறகு நிழலில் உலர்த்தி காய வைத்து மிஷினில் அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்த மாவை மறுபடியும் ஆறவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். தேவைப்படும் போது உபயோகப் படுத்திக் கொள்ளலாம்.

உளுத்தம் மாவு தயாரிக்கும்முறை:

ஒரு வாணலியில் ¼ டம்ளர் உளுத்தம் பருப்பை சிவக்க வறுத்து பொடி செய்து சலித்து வைத்துக் கொள்ளவும்.

செய் முறை:

ஒரு வாணலியில் ஈர அரிசி மாவை லேசாக வறுத்துக் கொள்ளவும்.மாவு கோலம் போடும் அளவு வறுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் ½ டம்ளர் தண்ணீரில் வெல்லத்தை போட்டு கரைய விடவும்

வெல்லம் கரைந்த உடன் தண்ணீரை வடிகட்டி கல்,மண்ணை நீக்கவும்.

வடிகட்டிய தண்ணீரை மறுபடியும் அடுப்பில் வைத்து காய்ச்சவும்.(முற்றிய பாகு வேண்டாம்)

வெல்லம் நன்றாக கரைந்து அடுத்த நிலைக்கு வரும் போது இறக்கி நன்றாக ஆற விடவும்.

நன்றாக ஆறிய வெல்லத்தண்ணீரை வறுத்தெடுத்த அரிசி மாவில் சிறிது சிறிதாக சேர்த்து உருட்டும் பதத்தில் வரும் போது எள்,உளுத்தம் மாவு,நெய் சேர்க்கவும்

சிறிய உருண்டைகளாக உருட்டி 10 நிமிடங்கள் கழித்து மிதமான தீயில் எண்ணெயை சூடாக்கி கொஞ்சம் கொஞ்சமாக போட்டு சிவந்தவுடன் பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்:

கிருஷ்ண ஜெயந்திக்கு ஈஸியான வெல்லசீடை தயார்.