வெண்ணிலா கேக்

on on on on off 3 - Great!
4 நட்சத்திரங்கள் - 3 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 1/4 கிலோ

ஜீனி - 1/2 கிலோ

நெய் - 1/4 கிலோ

வெண்ணிலா எசன்ஸ் - 2 மி.லி

முந்திரி பருப்பு துருவல் - 5 கிராம்

கொப்பரை துருவல் - 2 கிராம்

மஞ்சள் கலர் பவுடர் - ஒரு சிட்டிகை

செய்முறை:

முதலில் ஜீனியில் மூழ்கும்வரை நீர் ஊற்றி கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சி கலர் பவுடர் சேர்க்கவும்.

வேறு வாணலியை அடுப்பில் வைத்து நெய்யை ஊற்றி நெய் உருகியதும் மைதவை போட்டு வறுக்கவும்.

மாவுக் கலவை பொங்கி வந்து வாசம் வரும் போது எசன்ஸ் சேர்க்கவும்.

பின்பு மாவுக் கலவையை அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.

கய்ச்சி வைத்த பாகை சிறிது சிறிதாக மாவில் சேர்க்கவும். விடாமல் கிண்டிக் கொன்டே இருக்க வேண்டும்.

இப்போது எல்லாம் சேர்ந்து இருகி வரும் போது நெய் தடவிய தட்டில் கொட்டி மேலே மு.பருப்பு , கொப்பரை துருவலை தூவவும். மூன்று நிமிடம் கழித்து டைமண்ட் வடிவில் துண்டு போடவும்.

குறிப்புகள்: