வாழைப்பழ பணியாரம் (1)

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

ஃப்ரவுன் அரிசி - 1/2 ஆழாக்கு

மைதா மாவு - 1/2 ஆழாக்கு

வெல்லம் - இரண்டு அச்சு

பெரிய கனிந்த வாழைப்பழம் - 1

ஏலக்காய் - 3

தேங்காய் - 2 பத்தை

இட்லி சோடா - ஒரு பின்ச்

பாதம் பொடித்தது - 1 தேக்கரண்டி

சுக்கு பொடி - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - சுட தேவையான அளவு

உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:

ப்ரவுன் அரிசியை இரண்டு மணிநேரம் ஊறவைக்கவும்.

ஊறிய அரிசியை கிரைண்டரில் அரைத்து அத்துடன் ஒரு சிட்டிகை உப்பு, ஏலக்காய், மைதா சேர்த்து அரைக்கவும். கடைசியாக வாழைப்பழத்தை நறுக்கி சேர்த்து அரைக்கவும்.

வெல்லத்தை பொடித்து அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

மாவில் இட்லி சோடா, பொடித்த பாதம், சுக்குபொடி, தேங்காய் பொடியாக அரிந்து சேர்க்கவும்.

வெல்ல கரைசல் ஆறியதும் மாவில் வடிக்கட்டி சேர்க்கவும். மாவை நன்கு கலந்துக் கொள்ளவும்.

குழி பணியார சட்டியை காயவைத்து லேசாக எண்ணெய் ஒரு துளி விட்டால் போதும். மாவை ஊற்றி தீயின் தனலை மிதமாக வைத்து மூடிபோட்டு 2 நிமிடம் வேக விடவும். மறுபுறம் திருப்பி போட்டு மேலும் சிறிது எண்ணெய் விட்டு மூடி போட்டு 2 நிமிடம் வேகவிடவும்.

குறிப்புகள்:

இனிப்பு குழிப்பணியாரங்களை பல விதமாக செய்யலாம், மைதாவிற்கு பதில் கோதுமைமாவையும் சேர்க்கலாம். அரிசி பச்சரிசியிலும் செய்யலாம்.

அசைவ பிரியர்கள் முட்டை சேர்த்து கொள்ளலாம். முட்டை சேர்த்தால் இன்னும் நல்ல பொங்கி வரும்.

குழந்தைகளுக்கு நெய் ஊற்றியும் சுடலாம்.

வெல்லகரைசல் கட்டியாக ஒரு நாள் முன்பே செய்து பிரிட்ஜில் வைத்து ஊற்றினால் நல்ல இருக்கும்.