வாழைப்பழ பணியாரம்
தேவையான பொருட்கள்:
மைதா - 1 கப்
ரவை - 1 கப்
சர்க்கரை - 1 கப்
வாழைப்பழம் - 2
ஏலக்காய் - 4
பொடியாக நறுக்கிய தேங்காய் - தேவையான அளவு
நெய் அல்லது எண்ணெய் - பொரிக்க
செய்முறை:
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் துண்டுகளாக நறுக்கிய வாழைப்பழம், மைதா, ரவை, சர்க்கரை, சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து இரண்டு மணி நேரம் ஊற விடவும்.
ஊறிய பின் வாழைப்பழ கலவையை மிக்சியில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும். மசிந்து மாவு பொங்கி வரும்.
அரைத்த மாவில் நறுக்கிய தேங்காய், பொடித்த ஏலக்காய் சேர்க்கவும்.
மாவு இட்லி மாவு பதத்தில் இருக்க வேண்டும்.
பின் அடுப்பில் குழிப்பணியாரக்கல்லை வைத்து நெய் (அ) எண்ணெய் விட்டு, அதில் மாவை ஊற்றி வேக விடவும்.
சிவந்ததும் திருப்பி விட்டு வேகவிட்டு எடுத்து பரிமாறவும்.
குறிப்புகள்:
இதே மாவு கலவையை கடாயில் எண்ணெயை காயவிட்டு, குழிக்கரண்டியில் மாவை எடுத்து நேரடியாக எண்ணெயில் ஊற்றி பொரித்தும் செய்யலாம். இதனை அத்த பணியாரம் என்று கூறுவார்கள்.