வாழைப்பழ கேசரி

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

ரவை - 1 கப்

பச்சை வாழைப்பழம் - 2

சர்க்கரை - 2 கப்

நெய் - 1 கப்

ஏலக்காய் - 3

முந்திரி - 10

திராட்சை - 6

உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:

ரவையை நெய் விட்டு வறுத்து எடுத்து கொள்ளவும். ஏலக்காயை வறுத்து ஒரு தேக்கரண்டி சர்க்கரையுடன் மிக்சியில் தூள் செய்து கொள்ளவும்.

முந்திரி மற்றும் திராட்சையை நெய்யில் வறுத்து எடுத்து கொள்ளவும்.

இரண்டு கப் தண்ணீரை அடுப்பில் வைத்து கொதி வந்ததும் ரவையை போட்டு கிளறவும்.

ரவை வெந்தவுடன் வாழைப்பழத்தை நன்கு மசித்து அதனுடன் கலக்கவும்.

பிறகு சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.

அதில் நெய்யை ஊற்றி அதனுடன் ஏலக்காய் தூள், முந்திரி, திராட்சை சேர்த்து, இக்கலவை வாணலியில் ஒட்டாமல் வரும் போது இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: