வாழைப்பழ அப்பம்
தேவையான பொருட்கள்:
வாழைப்பழம் (பெரிதாக) - 1
மைதா - 1 கப்
அரிசி மாவு - 1 கப்
தூளாக்கிய வெல்லம் - 1 கப்
தேங்காய் துருவல் - 1/2 கப்
ஏலக்காய் - 2
சோடா உப்பு - ஒரு சிட்டிகை
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
ஒரு சிறிய பாத்திரத்தில் தூள் வெல்லத்தை போட்டு முழ்கும் வரை தண்ணீர் ஊற்றி வெல்லம் கரையும் வரை அடுப்பில் வைக்கவும்.
வெல்லம் நன்கு கரைந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
மற்றொரு பாத்திரத்தில் மைதா, அரிசிமாவு, சோடா உப்பு, தேங்காய் துருவல் போட்டு கலந்து கொள்ளவும்.
ஏலக்காயை பொடி செய்து அதனுடன் சேர்க்கவும்.
வாழைப்பழத்தையும் சேர்த்து நன்கு பிசைந்துக் கொள்ளவும்.
இந்த கலவையுடன் வெல்ல பாகையும் வடிக்கட்டி ஊற்றி எல்லாவற்றையும் ஒன்றாக கட்டித் தட்டாமல் கலந்துக்கொள்ளவும்.
இந்த கலவை இட்லி மாவு பதத்திற்கு கெட்டியாக இருக்க வேண்டும்.
ஒரு வாணலியில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும், ஒரு ஸ்பூன் நிறைய மாவு எடுத்து மெதுவாக எண்ணெயில் ஊற்றவும்.
இதேப்போல் நான்கு, ஐந்து ஊற்றி விடவும். அடி சிவந்து மேலெழும்பும் போது திருப்பி போட்டு நன்கு சிவந்ததும் எடுத்து பரிமாறவும்.