வரகரிசி பாயசம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வரகரிசி - 1/4 கப்

பால் - 2 கப்

சர்க்கரை - 10 அல்லது 15 தேக்கரண்டி

ஏலக்காய்த் தூள் - சிறிது

பட்டை - ஒரு சிறு துண்டு

லவங்கம் - 2

நீர் - 1 1/2 கப்

முந்திரி, திராட்சை, நெய் - தேவையான அளவு

குங்குமப்பூ - சிறிது

செய்முறை:

வரகரிசியை சுத்தம் செய்து ஒன்றரை கப் நீர் ஊற்றி, பட்டை மற்றும் லவங்கம் சேர்த்து அடுப்பில் வைத்து வேக வைக்கவும்.

அரிசி அரை பதமாக வெந்ததும் பால் சேர்த்து வேகவிடவும்.

வெதுவெதுப்பான பாலைச் சிறிதளவு எடுத்து, அத்துடன் குங்குமப்பூவைப் போட்டு தனியாக வைக்கவும். முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து எடுத்து வைக்கவும்.

அரிசி குழைய வெந்ததும் சர்க்கரையைச் சேர்த்துக் கிளறி, சற்று கெட்டியாகத் துவங்கியதும் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சையைச் சேர்த்து, ஏலக்காய்த் தூள் மற்றும் குங்குமப்பூ கலவையைச் சேர்த்துக் கிளறவும்.

விரும்பினால் ஃப்ரிட்ஜில் வைத்தெடுத்து, பொடியாக நறுக்கிய பாதாம், பிஸ்தா கொண்டு அலங்கரித்துப் பரிமாறவும்.

குறிப்புகள்:

ஏலக்காய்த் தூளுக்கு பதிலாக ஏலக்காயைத் தட்டி பட்டை மற்றும் லவங்கத்துடன் சேர்த்து சாதத்தில் போட்டு வேகவிடலாம். பட்டை மற்றும் லவங்கத்தை இனிப்பில் சேர்க்கும் பழக்கம் இல்லாதவர்கள் சேர்க்காமல் விட்டுவிடலாம். இதில் ஏலக்காய்க்கு பதிலாக எஸன்ஸ் சேர்த்தும் செய்யலாம்.

முதலில் நீரில் மசாலா பொருட்களைப் போட்டு, கொதி வந்ததும் அரிசியைச் சேர்க்கலாம். பாலுக்கு பதிலாக முக்கால் கப் கன்டண்ஸ்டு மில்க் பயன்படுத்தலாம்.

நான் சர்க்கரையைக் குறைவான அளவில் சேர்த்துள்ளேன், உங்கள் சுவைக்கேற்ப சர்க்கரையைச் சேர்த்துக் கொள்ளலாம்.