வரகரிசி சர்க்கரைப் பொங்கல்
தேவையான பொருட்கள்:
வரகரிசி - 1/2 கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்
பால் - 1 கப்
நீர் - 1 1/2 கப் + 1/4 கப்
வெல்லம் - 1 கப்
ஏலக்காய்த் தூள் - சிறிது
முந்திரி - சிறிது
திராட்சை - சிறிது
நெய் - 3 மேசைக்கரண்டி
செய்முறை:
வரகரிசி மற்றும் பாசிப்பருப்பைக் களைந்து வைக்கவும்.
குக்கரில் அரிசி மற்றும் பருப்புடன் ஒரு கப் பால், ஒன்றரை கப் நீர் ஊற்றி வேகவிடவும்.
கால் கப் நீரில் துருவிய வெல்லத்தைப் போட்டு அடுப்பில் வைத்து கரைந்ததும் வடிகட்டி வைக்கவும்.
வேக வைத்த அரிசி, பருப்பு கலவையுடன் வடிகட்டிய வெல்லக் கரைசலை ஊற்றி, அடுப்பை சிறு தீயில் வைத்துக் கிளறவும். அதனுடன் ஏலக்காய்த் தூள் மற்றும் 2 மேசைக்கரண்டி நெய் விட்டு கலந்துவிடவும்.
கடாயில் ஒரு மேசைக்கரண்டி நெய் விட்டு காய்ந்ததும் முந்திரி, திராட்சையை வறுத்து பொங்கலில் சேர்க்கவும்.
நன்றாக கிளறிவிட்டு நெய் பிரிந்து பொங்கல் பதத்திற்கு வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.