லாப்ஸி அல்வா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோதுமை ரவா - 1 கப்

சீனி - 2 கப்

சர்க்கரை சேர்க்காத கோவா - 100 கிராம்

நெய் - 1/2 கப்

தண்ணீர் - 3 கப்

ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி

நறுக்கின முந்திரி பாதாம் பருப்புகள் - 2 மேசைக்கரண்டி

செய்முறை:

ஒரு ப்ரஷர் பானில் நெய்யை ஊற்றி சூடாக்கவும். பின்னர் அதில் கோதுமை ரவையை போட்டு குறைந்த தீயில் வறுக்கவும்.

இடைப்பட்ட நேரத்தில் இரண்டைரை கப் தண்ணீரை கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும்.

கோதுமை ரவை வறுபட்டு வாசனை வர ஆரம்பித்ததும், தீயின் அளவை மிகவும் குறைத்து வைத்துக் கொள்ளவும்.

கொதிக்க வைத்துள்ள நீரை எடுத்து மாவில் ஊற்றவும். தண்ணீர் தெறிக்க வாய்ப்பு உள்ளதால் கவனம் எடுத்து மெதுவாக ஊற்றவும்.

பிறகு குக்கரை மூடி வைத்து, விசில் சத்தத்திற்கு காத்திராமல் தீயின் அளவைக் குறைத்து வைத்து, வெயிட் போட்டு விடவும். சுமார் பத்து நிமிடங்கள் வேகவிடவும்.

மீதமுள்ள அரை கப் தண்ணீரை ஒரு வாணலியில் ஊற்றி குறைந்த தீயில் சூடாக்கி, அதில் சீனி, துருவிய கோவா ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும்.

குக்கரில் ஆவி வெளியானதும் அதனைத் திறந்து அதில் சீனி, கோவா கலவையைக் கொட்டி, மிதமான தீயில், சிறிது சிறிதாக நெய் விட்டுக் கிளறவும்.

எல்லாம் ஒன்று சேர்த்து கெட்டியாகி, திரண்டு வரும் வரை கிளறி, பிறகு அதில் ஏலப்பொடி சேர்த்து கிளறி இறக்கவும். நறுக்கின முந்திரி, பாதாம் கொண்டு அலங்கரித்து, சூடாகப் பரிமாறவும்.

குறிப்புகள்: