லட்டு (2)
தேவையான பொருட்கள்:
ரவை - 1 கப்
தேங்காய்ப்பூ - 1/2 கப்
சீனி (இனிப்பின் தேவைக்கேற்ப) - 1/2 அல்லது 3/4 கப்
பட்டர் அல்லது மாஜரீன் - 1 மேசைக்கரண்டி
சூடான பால் (தேவையெனில்) - 1 அல்லது 2 மேசைக்கரண்டி
வெனிலா எசன்ஸ் - 1 தேக்கரண்டி
செய்முறை:
வாணலியை அடுப்பில் வைத்து தேங்காய்ப்பூவை போட்டு முறுக வறுத்து எடுக்கவும்.
அதேப் போல் ரவையையும் முறுக வறுத்தெடுக்கவும்.
வறுத்த ரவை மற்றும் தேங்காய்ப்பூவை மிக்ஸியில் போட்டு நைசாக அரைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் சீனியை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும். (ஒன்றரை கம்பி பதம் - பிசுபிசுப்பாக)
பின்னர் அதனுள் வெனிலா எசன்ஸ், பட்டர், சூடான பால் (தேவையெனில் - கலவை குழையாமல் இருப்பின் மட்டும்) மற்றும் அரைத்த ரவை தேங்காய்ப்பூ கலவையை சேர்த்து கிளறவும்.
கலவை சூடாக இருக்கும் போதே உருண்டைகளாக அல்லது அச்சில் (eg.:measuring spoons) போட்டு எடுக்கவும்.