லட்டு
தேவையான பொருட்கள்:
கடலைமாவு - 3 கப்
சர்க்கரை - 5 கப்
சமயல் சோடா - 1 பின்ச்
ஏலக்காய் - 5
கிராம்பு - 20
நெய் - 5 தேக்கரண்டி
முந்திரி - 20
டைமண்ட் கல்கண்டு - சிறிது
எண்ணை - பூந்தி செய்வதற்கு தேவையான அளவு
செய்முறை:
கடலைமாவுடன் சமயல்சோடா சேர்த்து நன்கு சலித்துவைக்கவும்.
முந்திரியை சிறியதாக ஒடித்து 1ஸ்பூன் நெய்யில் வறுக்கவும்.
ஏலக்காயைபொடிசெய்துவைக்கவும்.
கடலைமாவில் சிறிது தண்ணீர் ஊற்றி தோசைமாவுபதம் கரைக்கவும்.பூந்தி தேய்க்கும் கரண்டியில் மாவுவிழவேண்டும் அதுதான் மாவுபதம்.
வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்தவுடன் பூந்திதேய்க்கும் கரண்டியில் 1குழிகரண்டி மாவு ஊற்றி எண்ணையில் தேய்த்து சிறிதுநேரம் வெந்தவுடன் அரிகரண்டியில் எடுத்து தட்டில் வைக்கவும்.
எல்லா மாவையும் இதேபோல் தேய்க்கவும்.
மற்றொரு பாத்திரத்தில் 1கப் த்ண்ணீர் ஊற்றி சர்க்கரைபோட்டு கரையவிடவும்.சர்க்கரைபாகை இரண்டு விரல்களால் தொட்டால் பிசுபிசுப்புடன் இருக்கும்.இந்தபதம்சரியாக இருக்கும்.
பாகை அடுப்பில் இருந்து இறக்கிவைத்து அதில் 1ஸ்பூன் நெய்சேர்த்து பூந்தியைபோட்டு நன்கு கிளறிவிடவும்.வறுத்தமுந்திரி,கிராம்பு,ஏலக்காய்தூள்,கல்கண்டு எல்லாம் சேர்த்து நன்கு கிளறி 5நிமிடம் மூடிவைக்கவும்.
மீதி நெய்யை ஒருகப்பில் ஊற்றிவைக்கவும்.ஒருதட்டில் கொஞ்சம் பூந்தியைபோட்டு கைகளுக்கு நெய்தடவிக்கொண்டு பூந்தியை லேசாக பிசைந்து தேவையான அளவில் லட்டுகளாக உருட்டவும். எல்லா பூந்தியையும் இதேமுறையில் லட்டுகளாக பிடிக்கவும்.
குறிப்புகள்:
இந்த அளவில் சுமார் 35 லட்டு வரும்.