ரைபிள் சாக்லேட்





தேவையான பொருட்கள்:
மில்க் மெய்ட் - 1 கப்
பால் - 4 கப்
சீனி - 100 கிராம்
வெனிலா எசன்ஸ் - 1 மேசைக்கரண்டி
முட்டை - 3
சைனாகிராஸ் - 5 கிராம்
மில்க் பிஸ்கட் - 100 கிராம்
அன்னாசி பழம் - 2 மேசைக்கரண்டி
சீனி - 1 மேசைக்கரண்டி
செர்ரி பழம் - 2 மேசைக்கரண்டி
முந்திரி பருப்பு - 2 மேசைக்கரண்டி
ஸ்பாஞ் கேக் சதுரமானது - 150 கிராம்
ட்ரிங்கிங் சாக்லேட் - 3 மேசைக்கரண்டி
பால் - 1/2 கப்
சைனா கிராஸ் - 3 கிராம்
தண்ணீர் - 1/2 கப்
செய்முறை:
முதலில் மில்க் மெய்ட்,பால், சீனி இவற்றை ஒன்றாக சேர்த்து கலக்கி முட்டையை சேர்த்து நன்கு கலக்கி,வெனிலா எசன்ஸ் சேர்த்து கலக்கி வைக்கவும்.
இந்த கலவையில் இருந்து 1 கப் தனியாக எடுத்து வைக்கவும்.
அன்னாசி,செர்ரி,முந்திரியை சிறிதாக நறுக்கி 1 மேசைக்கரண்டி சீனி சேர்த்து வேகவைத்து தனியாக வைக்கவும்.
கேக்கை சிறிதாக நறுக்கி வைக்கவும்.
பின் 5 கிராம் சைனாகிராஸை பொடியாக நறுக்கி 1/2 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து காய்ச்சவும் சைனாகிராஸ் கரைந்ததும் ஒரு கப் போக மீதி இருக்கும் மில்க் மெய்ட் கலவையை ஊற்றி சூடாக்கவும்.கொதிக்க விடக்கூடாது.
பின் ஒரு அகலமான பாத்திரத்தில் பிஸ்கட்டுகளை அடுக்கி வைக்கவும்.அதன் மேல் வேகவைத்த அன்னாசி,முந்திரி,செர்ரி பழங்களை போடவும்.
பின் சூடாக்கிய நிலையில் உள்ள மில்க் மெய்ட் கலவையில் பாதியை ஊற்றவும் .பின் நறுக்கிய கேக்கை போடவும்.பின் மீதி உள்ள மில்க்மெய்ட் கலவையை ஊற்றவும். 10 நிமிடத்தில் அவை அப்படியே இறுகி விடும்.
பின் முதலில் தனியாக எடுத்து வைத்த ஒரு கப் மில்க் மெய்ட் கலவையில் சிறிது பாலை எடுத்து அதில் ட்ரிங்கிங் சாக்லேட்டை கரைத்து அந்த பால் கலவையில் சேர்த்து கலக்கி வைக்கவும்.
பின் 3 கிராம் சைனாகிராஸை பொடியாக நறுக்கி 1/2 கப் பால் ஊற்றி அடுப்பில் வைத்து காய்ச்சவும் சைனா கிராஸ் கரைந்ததும் அதை ட்ரிங்கிங் சாக்க்லேட் கலவையில் சேர்த்து சூடாக்கவும். பின் இதனை பிஸ்கட் மீது ஊற்றி ஆறவிடவும். ஆறிய பின் பரிமாறவும்.