ரெயின்போ ஸ்வீட்

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மைதா - 300 கிராம் + 2 தேக்கரண்டி

சீனி - 1 கப்

ஏலக்காய் - 3

நெய் - 2 தேக்கரண்டி

ஃபுட் கலர் (பச்சை, ரோஸ், ஆரஞ்சு) - 3 கலர்கள்

எண்ணெய் - பொரிக்க

செய்முறை:

மைதாவை சலித்து சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். மற்ற தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

மைதா மாவை மூன்று பாகங்களாக பிரித்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பிரித்து வைத்திருக்கும் மைதா மாவின் ஒரு பகுதியை எடுத்துக் கொள்ளவும். ஏதேனும் ஒரு கலரில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து அதை மாவில் சிறிது சிறிதாக ஊற்றி சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்துக் கொள்ளவும்.

இதைப் போல் பிரித்து வைத்திருக்கும் மாவில் மற்ற இருக் கலர்களையும் கலந்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி மைதாவை போட்டு நெய் ஊற்றி பேஸ்ட் போல் செய்துக் கொள்ளவும்.

மூன்று வெவ்வேறு நிறத்தில் செய்து வைத்திருக்கும் உருண்டைகளை எடுத்து சப்பாத்தி கட்டையில் வைத்து தேய்த்து எடுத்துக் கொள்ளவும்.

ஏதேனும் ஒரு நிறத்தில் உள்ள தேய்த்து வைத்திருக்கும் சப்பாத்தியை அடியில் வைத்து அதன் மேல் மைதா பேஸ்டை தடவவும் அதன் மேல் இன்னொரு நிறத்தில் உள்ள சப்பாத்தியை வைக்கவும். அதன் மேல் மீண்டும் மைதா பேஸ்டை தடவி மற்றொரு நிறத்தில் உள்ள சப்பாத்தியை வைக்கவும்.

மூன்று சப்பாத்தியையும் ஒன்றன் மேல் ஒன்று வைத்த பின்னர் அதை அப்படியே இறுக்கமாக இருக்கும்படி சுற்றவும்.

ரோல் போல சுற்றிய பின்னர் அதை சற்று தடிமனான துண்டுகளாக நறுக்கவும். அந்த துண்டுகளை சப்பாத்தி கட்டையில் வைத்து ஒரு முறை தேய்த்து எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெயை காய வைத்து தேய்த்து எடுத்த துண்டுகளை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் சீனியை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும். அதில் ஏலக்காயை சேர்த்து கலந்துக் கொள்ளவும் பின்னர் அதில் பொரித்த துண்டுகளை போட்டு எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: