ரியல் குலோப் ஜாமூன்
5 - Ok!
2 நட்சத்திரங்கள் - 5 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
ஸ்வீட் லெஸ் கோவா - 1/2 கிலோ
சமையல் சோடா - 2 பின்ச்
மைதா - 2 மேசைக்கரண்டி
சர்க்கரை - 3/4 கிலோ
எண்ணெய் அல்லது நெய் - பொரிப்பதற்கு
பால் - 1 மேசைக்கரண்டி
செய்முறை:
அகலமான பாத்திரத்தில் கோவாவை போட்டு, மைதா, பாலில் கரைத்த சமையல் சோடா கரைசலை தெளித்து சேர்த்து அழுத்தமாக தேய்த்து பிசையவும்.
கோவா மிருது தன்மை கிடைக்கும் வரை பிசையவும்.
இதனை 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
சர்க்கரையில் 2 கப் நீர் சேர்த்து பாகுகாய்ச்சவும்.
சிறு தீயில் எண்ணெய் அல்லது நெய்யில் ஜாமூன்களை பொரித்து சூடான பாகில் போடவும்.
நன்கு ஊறிய பிறகு பரிமாறவும்.