ரஸ்க் அல்வா
தேவையான பொருட்கள்:
ரஸ்க் - 10
சீனி - 1 கப்
நெய் - 5 தேக்கரண்டி
முந்திரி பருப்பு - 4 அல்லது 5
கிஸ்மிஸ் அல்லது பாதாம் - 4 அல்லது 5
செய்முறை:
தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்.
ரஸ்க் துண்டுகளை, மிக்ஸியில் போட்டு பொடிக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து சிறிது நெய் ஊற்றவும். நெய் காய்ந்ததும் ரஸ்க் தூளை அதில் போட்டு மிதமான தீயில் ஒரு நிமிடத்திற்கு கிளறவும்.
பொடித்த ரஸ்க் தூளின் அளவில் பாதியளவு சீனியை எடுத்து, அடுப்பில் இருக்கும் கலவையில் சேர்க்கவும்.
அதில் கால் கப் அளவு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 2-3 நிமிடங்களுக்கு நன்கு கிளறவும்.
வெந்த அல்வாவை, நெய் தடவிய பாத்திரத்தில் மாற்றி வறுத்த முந்திரி, பாதாம் கொண்டு அலங்கரிக்கவும்.
குறிப்புகள்:
இனிப்பு அதிகம் வேண்டுமென்றால், சீனியின் அளவை சிறிது அதிகமாக்கலாம்.
ரஸ்க் தூளுக்குப் பதிலாக, பன் அல்லது ரொட்டி சேர்த்தும் செய்யலாம்.
பன் அல்லது ரொட்டி அல்லது ரஸ்க் ஏற்கனவே இனிப்பானது, சமைக்கப்பட்டது என்பதால், சீக்கிரம் வெந்து விடும்.