ரஸமலாய் (அவன் செய்முறை)
தேவையான பொருட்கள்:
ரிக்கோட்டா சீஸ் - 1 டப்பா
சர்க்கரை - 1 கப்
ஏலத்தூள் - 1/2 தேக்கரண்டி
பாதாம் & பிஸ்தா - 1/2 தேக்கரண்டி (உடைத்தது)
க்ரீம் உள்ள பால் - 1/2 டப்பா
செய்முறை:
முதலில் மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி குறைந்த தணலில் வைத்து காய்ச்சவும்.
பால் கெட்டியாக ஆனதும் அரை கப் சர்க்கரையை சேர்த்து மீண்டும் பாலை 10 நிமிடம் கொதிக்க விடவும்.
அதன் பின்னர் பாலை நன்கு ஆற வைத்து அதில் ஏலக்காய் தூளை சேர்க்கவும்.
மலாய் செய்ய: ரிக்கோட்டா சீஸுடன் அரை கப் சர்க்கரையை சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.
இந்த கலவையை பேக்கிங் பாத்திரத்தில் அல்லது கப் கேக் செய்ய பயன்படுத்தும் கப் மோல்டில் முக்கால் பாகத்திற்கு ஊற்றி வைக்கவும்.
அவனை 350 டிகிரி முற்சூடு செய்து அதில் ட்ரேயை வைத்து 35 நிமிடங்கள் பேக் செய்து இளம் பொன்நிறமாக துவங்கியதும் எடுத்து விடவும். வெந்ததா என்பதை பார்க்க டுத் பிக் அல்லது போர்க்கை வைத்து சரி பார்த்துக் கொள்ளவும்.
பேக் செய்த மலாயை எடுத்து ஆற விடவும். ஆறியதும் அதன் மேல் கொதிக்க வைத்துள்ள பாலை ஊற்றி மேலே உலர்ந்த பருப்புகளை தூவி அலங்கரிக்கவும். இதை அப்படியேவும் பரிமாறலாம், அல்லது ப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறலாம்.