ரஸகுல்லா ரஸமலாய்

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பால் - 5 லிட்டர்

சர்க்கரை - 1/2 கிலோ

விப்பிங் கிரீம் - 250 கிராம் (Whipping Cream)

ரவை - 1 தேக்கரண்டி

வினீகர் அல்லது எலுமிச்சை சாரு - 5 அல்லது 6 தேக்கரண்டி

ஏலக்காய் பொடி - 1/4 தேக்கரண்டி

குங்குமப்பூ - சிறிது

பாதாம் பருப்பு - பொடியாக நறுக்கியது சிறிது

செய்முறை:

3 லிட்டர் பாலை கொதிக்க வைத்து அதில் வினீகர் (அ) எலுமிச்சை சாரு சேர்த்து திரிய வைக்கவும்.

அப்படியே 10 நிமிடம் இறக்கி வைத்து, மெல்லிய துணியில் வடிக்கட்டவும்.

குழாயில் தண்ணிர் திறந்து அதன் கீழ் இதை பிடிக்கவும். (பால் திரய சேர்க்கும் திரவியம் அலசிக்கொண்டு போவதர்காக)

இந்த துணி சுற்றிய திரட்டுப்பாலை அடி சமமாக இருக்கும் பாத்திரத்தை திருப்பி போட்டு அதன் மேல் வைத்து, மேலே கனமாக தண்ணீர் உள்ள பாத்திரம் ஒன்றை வைக்கவும். (தண்ணீர் சுத்தமாக வடிந்தால் தான் ரசகுல்லா ஸாப்ட்'ஆக வரும்)

இதை கைகளால் மிருதுவாக பிசையவும். (5 நிமிடம்)

இத்துடன் ரவை சேர்த்து மீண்டும் 5 நிமிடம் பிசையவும்.

இதை சிறு உருண்டைகளாக உருட்டவும். (இதை அப்படியே சர்க்கரை பாகில் போட்டு 15 நிமிடம் வேக விட்டு எடுத்தால் ரசகுல்லா).

ஓரம் விட்டுப்போகாமல் அதை சற்று கனமான தட்டய் போல் செய்து கொள்ளவும்.

அகலமான பாத்திரத்தில்(உருண்டைகள் ஒன்றோடு ஒன்று இடிக்காமல் இருக்க) சர்க்கரை போட்டு தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.

கொதித்ததும், இந்த உருண்டைகளை போட்டு சரியாக 15 நிமிடம் மிதமான தீயில் அடுப்பில் வைக்கவும்.

மீதம் இருக்கும் பாலை சுன்ட காய்ச்சவும்.

சூடான பால் ஒரு குழிக்கரண்டி எடுத்து குங்குமப்பூ போட்டு 5 நிமிடம் வைக்கவும்.

காய்ச்சிய பாலில் சர்க்கரை பாகில் இருந்து எடுத்த ரசமலாய்களை போட்டு, ஏலக்காய் பொடி, விப்பிங் கிரீம் சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிட்டு பாதாம் போட்டு, குங்குமப்பூ சேர்த்த பால் கலந்து குளிர்ந்ததும் பிரிட்ஜில் வைக்கவும்.

குறிப்புகள்: