ரவை பாயாசம்





தேவையான பொருட்கள்:
ரவை - 1/2 கப்
பால் - 3 கப்
சர்க்கரை - 1 கப்
குங்குமப்பூ - சிறிதளவு
முந்திரிப்பருப்பு - 10
நெய் - 3 மேசைக்கரண்டி
செய்முறை:
வாணலியில் நெய் விட்டு பொடியாக நறுக்கிய முந்திரியை போட்டு வறுக்கவும்.
பின் ரவையை போட்டு நிறம் மாறும் வரை வறுக்கவும்.
கனமான பாத்திரத்தில் பாலை நன்கு கெட்டியாகும் வரை காய்ச்சவும். பின் ரவையை போட்டு வேகவிடவும்.
ரவை வெந்த பின் சர்க்கரை, நெய் விட்டு கிளறவும். பாயாசம் கெட்டியான பின் குங்குமப்பூ, முந்திரி போட்டு இறக்கி பரிமாறவும்.