ரவை தேங்காய் பணியாரம்

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

ரவை - 250 கிராம்

மைதா மாவு - 1/4 கப்

தேங்காய் - ஒரு மூடி

சீனி - 150 கிராம்

ஏலக்காய்தூள் - 1/4 தேக்கரண்டி

எண்ணெய் - 2 கப்

செய்முறை:

மைதா மாவு, ரவை இரண்டையும் சலித்து சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும்.

வெறும் வாணலியில் சுத்தம் செய்த ரவையை போட்டு வாசனை வரும் வரை மூன்று நிமிடம் வறுத்து எடுத்து கொள்ளவும்.

அதே வாணலியில் தேங்காய் துருவலையும் போட்டு அதன் நிறம் மாறும் வரை வதக்கவும்.

ஒரு பாத்திரத்தில் வறுத்த ரவையுடன், வறுத்த தேங்காய் துருவல், சீனி மற்றும் ஏலக்காய் தூள் போட்டு ஒன்றாக கலந்துக் கொள்ளவும்.

மற்றொரு பாத்திரத்தில் கால் கப் தண்ணீரை சூடுப்படுத்தி அந்த தண்ணீரை ரவை கலவையுடன் சிறிது சிறிதாக தெளித்து பிசைந்து விடவும். ரவை கலவை உருண்டையாக பிடிக்கும் பக்குவத்திற்கு இருக்க வேண்டும்.

பின்னர் அதை உருண்டைகளாக பிடித்து தட்டில் காய வைக்கவும். அப்பொழுது தான் உருண்டையை மைதா மாவில் தோய்க்கும் போது உடையாமல் இருக்கும்.

ஒரு பாத்திரத்தில் சலித்த மைதா மாவை போட்டு அதில் நான்கு மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி திக்காக கரைத்து கொள்ளவும். காய வைத்த ரவை உருண்டைகளை மைதா மாவில் தோய்க்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மைதாவில் தோய்த்த ரவை உருண்டைகளை போட்டு 2 நிமிடம் கழித்து திருப்பி போட்டு வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்:

இதை மைதாவில் தோய்க்காமல் வெறும் ரவை உருண்டையாகவும் சாப்பிடலாம்.