ரவை கேசரி

on on on on off 7 - Great!
4 நட்சத்திரங்கள் - 7 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

ரவை - 1 கப்

சீனி - 1 கப்

பால் - 2 1/2 கப்

முந்திரி - 15

பட்டை - 1

ஏலக்காய் - 3

நெய் - 6 தேக்கரண்டி (தேவைக்கு ஏற்ப கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்)

தேங்காய் எண்ணெய் - 3 தேக்கரண்டி

புட் கலர் (ஆரஞ்ச்) - ஒரு பின்ச்

செய்முறை:

ரவையை வெறும் வாணலியில் வறுக்கவும். சிறிது சூடு ஏறியதும் தேங்காய் எண்ணெய் சேர்த்து கிளறி வறுக்கவும்.

அடி கனமான பாத்திரத்தில் நெய் விட்டு ஏலக்காய், பட்டை, முந்திரி சேர்த்து வறுக்கவும்.

அதில் பாலை சேர்த்து அத்துடன் நீரில் கலக்கிய கலரையும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

கொதித்த பின் தீயை சிம்மில் வைத்து சிறிது உப்பு (இனிப்பு சுவையை எடுத்துக் கொடுக்க) மற்றும் ரவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கொண்டே கிளறவும். அடி பிடிக்காமல், கட்டி பிடிக்காமல் கவனமாக கிண்டி விட்டு ரவை வெந்ததும், பால் முழுவதும் வற்றியதும் இறக்கவும்.

கீழே இறக்கியதும் அல்லது அடுப்பை அணைத்ததும் சீனியை கொட்டி கிண்டவும்.

குறிப்புகள்:

தேங்காய் என்ணெய் சேர்ப்பதால் கூடுதலாக நறுமணம் கிடைக்கும்.

சீனியை முதலிலேயே சேர்த்தால் ரவை வேக நேரமெடுக்கும். அதனால் தான் கடைசியில் சேர்க்கிறோம்.