ரவை கேக் (கேசரி)

on on on on off 2 - Great!
4 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

ரவை - 1 கப்

சர்க்கரை - 1 கப்

பட்டர் - 50 கிராம்

தண்ணீர் - 2 1/4 கப்

உப்பு - ஒரு பின்ச்

முந்திரி - 5

பாதாம் - 2

கருப்பு திராட்சை - 8

நெய் - 2 தேக்கரண்டி

செய்முறை:

இரண்டு பாத்திரம் எடுத்துக்கொள்ளவும்.

ஒரு நாண் ஸ்டிக் தவாவில் ஒரு தேக்கரண்டி நெய்யை ஊற்றி முந்திரி, பாதாம், கருப்பு திராட்சை போட்டு வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

அதே தவாவில் பட்டரை போட்டு உருகும் முன் ரவையை கொட்டி கிளறவும் அடிப்பிடிக்காமல் லேசான பொன்னிறமாக வறுக்கவும்.

வறுக்க ஆரம்பிக்கும் முன் மற்றொரு பாத்திரத்தில் இரண்டே கால் கப் தண்ணீர் ஊற்றி அதில் மஞ்சள் நிறப்பொடி, ஒரு பின்ச் உப்பு, ஒரு ஏலக்காய் போட்டு கொதிக்க விடவும்.

வறுத்து கொண்டிருக்கும் ரவையில் அந்த கொதித்த தண்ணீரை ஊற்றி கிளறவும். தீயை குறைக்கவும்.

இப்போது சர்க்கரையையும் சேர்த்து கிளறவும்.

நல்ல கிளறி கட்டியாகும் சமயம் வறுத்து வைத்த முந்திரியை சேர்த்து மேலும் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு கிளறி இறக்கி சூட்டுடன் ஒரு தட்டில் (அ) டிரேயில் கொட்டி சமப்படுத்தி ஆறியதும் டைமண்ட் ஷேப்பில் கட் செய்து பரிமாறவும்.

மஞ்சள் நிற கலர் இல்லை என்றால் ரெட் கலர் பொடியும் போட்டுக்கொள்ளலாம்.

குறிப்புகள்: