ரவா லட்டு (2)
தேவையான பொருட்கள்:
ரவா - 2 டம்ளர்
சீனி - 4 டம்ளர்
பால் - 3/4 லிட்டர்
முந்திரி - 10 கிராம்
திராட்சை - 10 கிராம்
ஏலக்காய் - 10 கிராம்
நெய் - 200 கிராம்
செய்முறை:
வாணலியில் 100 கிராம் நெய் ஊற்றி முந்திரி, திராட்சை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதே வாணலியில் மீதமுள்ள நெய்யை ஊற்றி ரவையை பொன்னிறமாக வறுத்து ஒரு அகன்ற பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
அத்துடன் எடுத்து வைத்திருக்கும் சீனியை கலக்கிக் கொள்ள வேண்டும். சீனி நன்கு கரைய வேண்டுமென்றால் சற்று அரைத்து சேர்த்துக் கொள்ளலாம்.
பிறகு அடுப்பில் பால் வைத்து காய்ச்சவும். காய்ச்சின பாலை அடுப்பிலேயே வைத்து சூடாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
பின் ரவையோடு வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கலக்கி ஏலக்காயைப் பொடி செய்து தூவிக் கொள்ளவும்.
அதன் பின் சூடான பாலை கொஞ்சம் கொஞ்சமாக ரவையோடு சேர்த்து சுடாக பிசைந்து லட்டுகளாக (உருண்டைகளாக) பிடித்து வைத்து பரிமாறவும்.