ரவா லட்டு (1)
1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
நெய் சேர்த்து வறுத்த ரவா - 1 கப்
சர்க்கரை - 1/2 கப்
துருவிய தேங்காய் - 1/2 கப்
ஏலக்காய் பொடி - 1/4 தேக்கரண்டி
நெய்யில் வறுத்த திராட்சை, முந்திரி - 2 தேக்கரண்டி
சூடான பசும்பால் - 5 தேக்கரண்டி
செய்முறை:
மேற்கண்ட பொருட்களை பாலைத் தவிர ஒன்றாக ஒரு பாத்திரத்தில் போட்டு பாலை ஒவ்வொரு தேக்கரண்டியாக சேர்த்து கலக்கவும்.
உருண்டை பிடிக்கும் அளவு ஈரம் இருந்தால் போதும். இல்லை யென்றால் இன்னும் கொஞ்சம் சேர்த்துப் பார்க்கலாம்.
சூடாக லட்டு போல் உருண்டை பிடிக்கவும்.