ரவா லட்டு

on on on on off 3 - Great!
4 நட்சத்திரங்கள் - 3 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

ரவை - 1 கப் (150 கி)

சர்க்கரை - 1/2 கப் (75 கி)

துருவிய தேங்காய் - 1/2 கப்

முந்திரி - 7 அல்லது 8

உலர்ந்த திராட்சை - சிறிது

ஏலக்காய் - 1 அல்லது 2

நெய் - தேவையான அளவு

பால் - தேவையான அளவு

செய்முறை:

ஒரு கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி முந்திரி, உலர்ந்த திராட்சை போட்டு வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.

அதே கடாயில் ரவையை வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.

பின்னர், அதே கடாயில் துருவிய தேங்காயை ஈரம் இல்லாமல் வறுத்துக் கொள்ளவும்.

பிறகு துருவிய தேங்காயுடன், வறுத்து வைத்துள்ள ரவை, முந்திரி, திராட்சை மற்றும் சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரையுடன் ஏலக்காயை பொடி செய்து சேர்க்கவும். (இங்கு, நான் ஏலக்காயை தட்டி, உள்ளே உள்ள விதைகளை மட்டும் சேர்த்து இருக்கிறேன்.) இவற்றை இளம் சூட்டில் ஒன்றாக கலக்கவும்.

பிறகு அந்த கலவையில் சிறிதளவு பால் சேர்த்து கொள்ளவும்.

பிறகு கலவையை வேறொரு தட்டுக்கு மாற்றி இளஞ்சூட்டிலேயே சிறு, சிறு உருண்டைகளாக பிடித்து வைத்து பரிமாறவும். ஆறியதும் சிறிது கெட்டியாகும்.

குறிப்புகள்:

இந்த ரவா லட்டு விரைவிலேயே, எளிதாக செய்து விடலாம். இங்கு குறிப்பிட்டுள்ள அளவு எடுத்தால் 10 - 12 லட்டுகள் வரும்.

பால் சேர்த்து செய்திருப்பதால் ஒன்றிரண்டு நாட்களில் சாப்பிட்டால் நல்லது.