ரவா சாக்லேட் கோவா
7 - Good!
3 நட்சத்திரங்கள் - 7 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
ரவா - 1 கப்
சீனி - 1 டேபிள் ஸ்பூன்
வெள்ளை சாக்லேட் - 200 கிராம்
கரூர் நெய் - 5 டேபிள் ஸ்பூன்
வற்றிய பால் - 50 மில்லி
டின் பால் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - கால் சிட்டிகை
செய்முறை:
ரவாவை வாசம் வரும்வரை வறுத்துக்கொள்ளவும். இன்னொரு பாத்திரத்தில் வெள்ளை சாக்லேட்டை போட்டு அடுப்பில் மிதமான தீயில் வைத்து, உருகும் வரை கிளறவும்.
உருகியவுடன் நெய், ரவாவை அதனுடன் சேர்த்து நன்றாக கலக்கி, சீனி, உப்பு போட்டு, டின் பாலையும் வற்றிய பாலையும் ஊற்றி கிளறவும். பால் வற்றி திரண்டு வரும் போது இறக்கி பரிமாறவும்.