ரசமலாய் (3)
தேவையான பொருட்கள்:
ரிக்கோட்டா சீஸ் - 2 கப்
சர்க்கரை - 3/4 கப்
பால் - 2 கப்
ஏலக்காய் - தேவையான அளவு
குங்குமப்பூ - தேவையான அளவு
நட் வகைகள் - தேவையான அளவு (நற நறவென்று பொடி செய்தது)
செய்முறை:
ரிக்கோட்டா சீஸ், சர்க்கரை மிக்ஸ்யில் (அ) பிலென்டரில் அடிக்கவும் (சர்க்கரை கரையும் வரை. கலவை ரொம்ப தண்ணியாகும் வரை அடிக்கக்கூடாது).
இந்தக் கலவையை ஓவனில் வைக்கும் பாத்திரத்தில் ஊற்றி பரப்பவும்.
300 degree F ப்ரீஹீட் பண்ணிய ஓவனில் வைக்கவும். பின்னர் பேக் பண்ணிய சீஸை ஒரு கத்தியால் குத்தி பதம் பார்க்கவும். கத்தியில் ஒட்டாமல் இருக்க வேண்டும் (பதம் சரியாக சுமாராக வர நிமிடம் எடுக்கும்)
சில சமயம் பேக் ஆன சீஸ் தண்ணீர் விடும். அப்படி ஆகுமெனில் அந்த தண்ணீரை வடிகட்டிக்கொள்ளவும்.
சீஸ் ஆறியவுடன் விருப்பமான வடிவத்தில் வெட்டி கொள்ளவும்.
பாலை சர்க்கரை, பொடி பண்ணிய ஏலக்காய் சேர்த்து காய்ச்சி இறக்கவும்.
பின்னர் வெட்டிய சீஸ் துண்டுகள் மேல் ஆறிய பாலை ஊற்றவும்.
ரசமலாய் துண்டுகள் மேல் குங்குமப்பூ மற்றும் நட் வகைகள் தூவி அலங்கரிக்கவும்.
சுவையான ரசமலாய் தயார். பின்னர் fridge-ல் வைத்து கூல் ஆனவுடன் சாப்பிடவும்.