ரசகுல்லா (2)

on on on off off 4 - Good!
3 நட்சத்திரங்கள் - 4 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பால் – 1 லிட்டர்

சீனி – 100 கிராம்

மைதா – 2 மேசைக்கரண்டி

ஏலக்காய் – 5

ரோஸ் எசன்ஸ் – 2 சொட்டு

சிறிய எலுமிச்சம்பழம் – 1

செய்முறை:

ஏலக்காயை தோலுரித்து பொடிக்கவும். எலுமிச்சையை நறுக்கி சாறு பிழிந்து வைக்கவும்.

பாலை அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சி கொதிக்க ஆரம்பித்ததும் எலுமிச்சைச்சாறு கலக்கவும்.

பால் திரிந்ததும் இறக்கி ஒரு துணியில் தண்ணீர் முழுவதையும் வடிகட்டவும்.

பனீரை தனியாக எடுத்து மைதா, ஏலப்பொடி சேர்த்து கலவை மெதுவாக ஆகும்வரை பிசைந்து, சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டவும்.

சீனியில் இரண்டு டம்ளர் (நானூறு மிலி) தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும்.

பாகு கொதிக்க ஆரம்பித்ததும் உருண்டைகளைப் போட்டு பனிரெண்டு நிமிடங்கள் வேக விடவும் (மூன்று நிமிடங்களுக்கு ஒரு முறை லேசாக தண்ணீர் மேலே தெளிக்கவும்).

பின் கீழே இறக்கி ரோஸ் எசன்ஸ் கலந்து ஆற வைத்து ஃப்ரிட்ஜில் வைத்து பின் பரிமாறவும்.

குறிப்புகள்: