மைதா டைமண்ட் பிஸ்கட்

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 1/4 கிலோ

சீனி - 100 கிராம்

டால்டா - 50 கிராம்

சோடா உப்பு - 1 சிட்டிகை

உப்பு - 1/4 தேக்கரண்டி

செய்முறை:

மைதா மாவை சுத்தம் செய்து சலித்து எடுத்துக் கொள்ளவும். டால்டாவை உருக்கி வைத்துக் கொள்ளவும்.

மிக்ஸியில் சீனியை போட்டு பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, பொடி செய்த சீனி இரண்டையும் போட்டு ஒன்றாக கலந்து கொள்ளவும். பின்னர் மாவில் உருக்கிய டால்டாவை ஊற்றி பிசைந்துக் கொள்ளவும்.

கால் கப் தண்ணீரில் உப்பு மற்றும் சோடா உப்பை போட்டு கலந்து வைத்துக் கொள்ளவும். இந்த தண்ணீரை சிறிது சிறிதாக மாவில் ஊற்றி பிசைந்துக் கொள்ளவும்.

மாவு நன்கு கையில் ஒட்டாமல் மிருதுவான பதம் வரும் வரை பிசையவும். பிசைந்த மாவை சாத்துக்குடி அளவு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

அதில் ஒரு உருண்டையை சப்பாத்தி கட்டையில் வைத்து தேய்க்கவும். நன்கு மெல்லியதாக தேய்க்காமல் சற்று தடிமனாகவே தேய்க்கவும். அதை கத்தியை வைத்து டைமண்ட் வடிவில் துண்டுகள் போடவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் செய்து வைத்திருக்கும் பிஸ்கட் துண்டுகளை போடவும். பின்னர் திருப்பி விட்டு இரண்டு பக்கமும் வெந்ததும் பொன்னிறமாக இருக்கும் போதே எடுத்து விடவும்.

குறிப்புகள்: