மைதா டைமண்ட் கேக்

on on off off off 4 - Ok!
2 நட்சத்திரங்கள் - 4 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மைதா - 1 கப்

நெய் - 1 கப்

முந்திரி - 10

சீனி - 2 கப்

ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி

செய்முறை:

மைதா மாவை சலித்து எடுத்துக் கொள்ளவும். முந்திரியை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கவும்.

வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரியை போட்டு வறுத்து எடுத்து வைக்கவும்.

பிறகு அதில் மைதா மாவை போட்டு 2 நிமிடம் வாசனை வரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.

மற்றொரு பாத்திரத்தில் சீனியை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். இந்த பாகில் ஏலக்காய் பொடியை சேர்த்து கிளறவும்.

பாகு கம்பி பதம் வந்ததும் அதில் மைதா மாவு கலவையை கொட்டி கை விடாமல் 7 நிமிடம் கிளறிக் கொண்டே இருக்கவும்.

ஒரு தட்டில் நெய் தடவி வறுத்த முந்திரி பருப்பை அதில் தூவி வைக்கவும்.

நெய் தடவிய தட்டில் மைதா கலவையை ஊற்றி சமமாக பரப்பி விடவும்.

கலவையை நன்கு சமமான அளவில் பரப்பி விட்டதும் சூடு தனியும் முன் கத்தி அல்லது தோசை திருப்பியால் ஸ்லைஸ் போடவும்.

குறிப்புகள்: