மைதா சீடை
0
தேவையான பொருட்கள்:
மைதா - 1 கிலோ
அரிசிமாவு - 2 ஆழாக்கு
தேங்காய் - 1
எண்ணெய் - 1/2 லிட்டர்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மைதாவை இட்லிச்சட்டியில் அவிக்கவும். அரிசி மாவை வறுக்கவும்.
மைதாவையும், அரிசிமாவையும் சலித்து கொள்ளவும்.
தேங்காயை ஆட்டி பாலெடுக்கவும். தேங்காய்ப்பாலை சூடாக்கி (கொதிக்காமல்) கொள்ளவும்.
மாவுடன் உப்பு, தேங்காய்ப்பால் விட்டு பிசையவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கட்டையில் பிழிந்தெடுத்து பொரித்தெடுக்கவும்.