மைதா கேக்
3 - Great!
4 நட்சத்திரங்கள் - 3 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
சலித்து எடுத்த மைதா மாவு - 5 கப்
டால்டா - 1 கப்
பொடித்த சர்க்கரை - 1 கப்
உப்பு - 1 பின்ச்
சோடா உப்பு - 1 தேக்கரண்டி
செய்முறை:
மைதாமாவுடன் சோடாமாவை சேர்த்து சலிக்கவும்.
அதனுடன் பொடித்த சர்க்கரை, டால்டாவை சேர்த்து நன்கு பிசையவும். தேவை எனில் கொஞ்சம் தண்ணீர் சேர்க்கலாம்.
நன்கு பிசைந்து 10 நிமிடம் ஊற விட்டு பின் அவற்றை கொஞ்சம் பெரிய உருண்டையாக பிடித்து சப்பாத்திக்கு உருட்டுவது போல் திக்காக உருட்டி வைக்கவும்.
பின் கத்தியால் சிறிது சிறிது இடைவெளி விட்டு நீளமாக கீறீ மேலும் அகலமாகவும் கீறினால் டைமண் ஷேப் கிடைக்கும்.
அதை தனித்தனியாக எடுத்து வைத்து வாணலியில் எண்ணைய்/டால்டா/நெய் ஊற்றி காய்ந்ததும் போட்டு பொன்னிறமாக வந்ததும் எடுத்து ஆறியதும் சாப்பிடலாம்.
குறிப்புகள்:
ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்.