மைக்ரோ அவன் பனீர் நட்ஸ் அல்வா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பனீர் - 250 கிராம்

சர்க்கரை - 100 கிராம்

பால் - 2 மேசைக்க்ரண்டி

முந்திரி - 10

பாதாம் - 10

பிஸ்தா - 10

ஏலக்காய் - 3

செய்முறை:

பாதாமை தண்ணீரில் போட்டு ஓவனில் அரை நிமிடம் வைத்து எடுத்து தோல் உரிக்கவும்.

பாதாம், முந்திரி, பிஸ்தாவை மிக்ஸியில் கரகரப்பாக பொடிக்கவும்.

ஏலக்காயை தோல் நீக்கி அத்துடன் சேர்க்கவும். பனீரையும், சர்க்கரையையும் சேர்த்து ஒரு ஓட்டு ஓட்டி எடுக்கவும்.

எல்லாம் கலந்து வந்ததும் எடுத்து பால் விட்டு கலக்கி மைக்ரோஅவன் பாத்திரத்தில் கொட்டி மைக்ரோ நடுத்தரத்தில் (பாதி வெப்பம்) 10 நிமிடம் வைக்கவும். இடையிடையே கிளறி விடவேண்டும்.

கெட்டியாகவில்லை என்றால் இன்னும் ஓரிரு நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.

தேவைப்பட்டால் தட்டில் கொட்டி வில்லைகள் போட்டு பரிமாறவும்.

குறிப்புகள்:

நிமிடங்கள் அவனுக்கு அவன் நேரம் மாறுபடும்