மைக்ரோவேவ் மைசூர் பாகு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கடலை மாவு – 1 கப்

நெய் – 1 கப்

பொடித்த சர்க்கரை – 2 கப்

ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி

பால் – 1/8 கப்

செய்முறை:

மைசூர் பாகு செய்ய தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கடலை மாவை எடுத்துக் கொண்டு அதனுடன் நெய்யை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.

கலந்து வைத்திருக்கும் இந்த கடலை மாவு கலவையை அவனில் ஒரு நிமிடம் வைக்கவும்.

பிறகு அதனை வெளியில் எடுத்து அதனுடன் பொடித்த சர்க்கரை சேர்த்து மேலும் 2 நிமிடம் வைக்கவும்.

2 நிமிடம் கழித்து இந்த கடலை மாவு கலவையை மைக்ரோவேவ் அவனிலிருந்து வெளியில் எடுக்கவும்.

இப்பொழுது அதில் பால் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளறி 2 நிமிடம் வைக்கவும்.

ஒரு தட்டில் நெய் தடவி அதில் இந்த கலவையை கொட்டி சமப்படுத்தி விடவும்.

பிறகு துண்டுகள் போடவும்.

குறிப்புகள்:

கடலை மாவினை கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும். இல்லை என்றால் சில சமயம் மாவின் வாசம் வரும்.

அவரவர் மைக்ரோவேவ் திறன் பொருத்து சமைக்கும் நேரத்தினை கூட்டியோ அல்லது குறைத்தோ செய்யலாம்.