மைக்ரோவேவ் மைசூர்பாகு
0
தேவையான பொருட்கள்:
கடலைமாவு - 1 கப்
பொடித்த சக்கரை - 2 கப்
நெய் - 1 கப்
ஏலக்காய் (பொடிசெய்தது) - 2
பால் - 2 மேசைக்கரண்டி
செய்முறை:
கடலை மாவு, பொடித்த சர்க்கரை, நெய், ஏலக்காய் எல்லாவற்றையும் கலந்து ஒரு மைக்ரோவேவ் ஓவன் பாத்திரத்தில் போட்டு நாலரை நிமிடம் ஹை பவரில் செட் செய்து வைக்கவும்.
இரண்டு நிமிடம் கழுந்தவுடன் அதை வெளியில் எடுத்து இரண்டு டேபிள் ஸ்பூன் பால் விட்டு கலக்கவும்.
பின்னர் அதை மீண்டும் ஓவனின் உள்ளே வைத்து மீதமுள்ள நிமிடங்களுக்கு வேகவிடவும்.
நேரம் முடிந்தவுடன் வெளியில் எடுத்து ஒரு கிளறு கிளறி உடனே ஒரு தட்டில் போட்டு பரப்பி, சிறிது ஆறியவுடன் துண்டுகள் போடவும்.
குறிப்புகள்:
அவரவர் மைக்ரோவேவ் திறன் பொருத்து சமைக்கும் நேரத்தினை கூட்டியோ அல்லது குறைத்தோ செய்யலாம்.